/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பனிப்பொழிவால் கருகும் பருத்தி செடிகள்
/
பனிப்பொழிவால் கருகும் பருத்தி செடிகள்
ADDED : பிப் 10, 2025 05:24 AM
ரெட்டியார்சத்திரம்: ரெட்டியார்சத்திரம் பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு வரை, போதிய மழை இல்லாத சூழலில் நீராதாரங்கள் வறண்டிருந்தன. சில ஆண்டுகளாக பருத்தி, பயறு வகைகள், கொத்தமல்லி சாகுபடியை விவசாயிகள் தவிர்க்கும் நிலை ஏற்பட்டது. பெரும்பாலானோர் மக்காச்சோள சாகுபடிக்கு மாறினர். சமீபத்திய மழையால் இப்பகுதியில் சிலர் பருத்தி சாகுபடியை நம்பிக்கையுடன் துவக்கினர். மாங்கரை, எம்.அம்மாபட்டி, மேலப்பட்டி, கொட்டாரபட்டி, கசவனம்பட்டி, கரிசல்பட்டி, கந்தசாமிபுரம், அனுமந்தராயன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில், பருத்தி சாகுபடி செய்தனர். சில வாரங்களாக பனிப்பொழிவு அதிகரித்து, பருத்தி செடிகள் கருகத் துவங்கியது.
கடன் வாங்கி பராமரிப்பு செலவுகளை மேற்கொண்ட விவசாயிகள், சாகுபடி பாதிப்பால் கவலையில் உள்ளனர்.
மாங்கரை விவசாயி ராஜா கூறியதாவது: சமீபத்திய மழையால் மக்காச்சோளம் தவிர்த்த முந்தைய சாகுபடியை துவக்கினோம். பரவலாக இப்பகுதியில் பருத்தி செடிகள் பலனளிக்கும் சூழலில் வளர்ந்தது. அதிக பனிப்பொழிவால் செடியின் இலைகள், குறுத்துப் பகுதிகள் கருகத் துவங்கியது என்றார்.

