/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
முறிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தால் ஆபத்து
/
முறிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தால் ஆபத்து
முறிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தால் ஆபத்து
முறிந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தால் ஆபத்து
ADDED : ஜூன் 28, 2024 12:24 AM

போக்குவரத்துக்கு சிரமம்
அய்யலுார் அப்பிநாயக்கன்பட்டியில் இருந்து கொல்லப்பட்டி புதுார் செல்லும் தார் ரோடு கற்கள் பெயர்ந்து போக்குவரத்துக்கு சிரமம் தருகிறது .பல நாட்களாக குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் ,விவசாயிகள் சிரமப்படுகின்றனர். ராமசாமி, அய்யலுார்.
................-------
மழை நீருடன் சாக்கடை நீர்
சின்னாளப்பட்டி கீழக்கோட்டை 14வது வார்டு ஓடைத்தெருவில் சாக்கடை பாலம் கட்டியும் மழைநீர் ,சாக்கடை நீர்தேங்கி உள்ளது .மழைநேரத்தில் மழைநீருடன் சாக்கடை நீர் நடைபாதை முழுவதும் தேங்கி நிற்கிறது. இதை சரிசெய்ய வேண்டும். ஐயப்பன், சின்னாளப்பட்டி.
.............--------சேதமான மின்கம்பம்
ஒட்டன்சத்திரம் திருவள்ளுவர் ரோடு முத்து மஹால் பின்புற தெருவில் மின்கம்பம் சேதமடைந்து விரிசல் விட்டு முறிந்து விழும் நிலையில் உள்ளது. இனி மழைக்காலம் என்பதால் விபத்து ஏற்படும் முன் மின்கம்பத்தை மாற்ற வேண்டும். மோகன், ஒட்டன்சத்திரம்.
.................--------குடிநீர் தொட்டி சேதம்
வேடசந்துார் ஒன்றியம் நாகையகோட்டை என்.புதுரோடு ஏடி காலனியில் குடிநீர் மேல்நிலைத் தொட்டி குழாய் சேதமடைந்து தண்ணீர் வீணாகிறது .இதனால் பல வீடுகளுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது . திருப்பதி, நாகையகோட்டை.
................--------எந்நேரமும் விபத்து அபாயம்
ஒட்டன்சத்திரம் ஒன்றியம் தாசிரிபட்டி ஊராட்சி புதுக்கோட்டை அருந்ததியர் காலனியில் வீட்டின் கூரை இடிந்து காங்கிரீட் கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் எந்நேரமும் விபத்து அபாயம் உள்ளது .இதை சரி செய்ய வேண்டும் கி.ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.
..........--------கழிவு நீர் தேக்கத்தால் தொற்று
சிறுமலை அண்ணா நகர் 4வது வார்டில் சாக்கடையில் பல நாட்களாக கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய்தாக்கும் அபாயம் உள்ளது . சிரியவர் முதல் பெரியவர் வரை பாதிக்கின்றனர். சாக்கடையை துார் வாரி கழிவுநீர் கடக்க செய்ய வேண்டும். ராமகிருஷ்ணன், சிறுமலை.
..........--------மேலாண்மையில் அலட்சியம்
ரெட்டியார்சத்திரம் ஒன்றியம் குட்டத்துப்பட்டி ஊராட்சி மைலாப்பூரில் திடக்கழிவு மேலாண்மையில் அலட்சியம் நீடிக்கிறது. விளைநிலங்களில் பாலிதீன் கழிவுகளை கலப்பதால் சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -சி.சேவியர், மைலாப்பூர்.
.......