/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பாழ்படும் பூங்கா இடங்கள்; மயானத்தில் இல்லை வசதிகள் பரிதவிப்பில் ஒட்டன்சத்திரம் 14 வது வார்டு மக்கள்
/
பாழ்படும் பூங்கா இடங்கள்; மயானத்தில் இல்லை வசதிகள் பரிதவிப்பில் ஒட்டன்சத்திரம் 14 வது வார்டு மக்கள்
பாழ்படும் பூங்கா இடங்கள்; மயானத்தில் இல்லை வசதிகள் பரிதவிப்பில் ஒட்டன்சத்திரம் 14 வது வார்டு மக்கள்
பாழ்படும் பூங்கா இடங்கள்; மயானத்தில் இல்லை வசதிகள் பரிதவிப்பில் ஒட்டன்சத்திரம் 14 வது வார்டு மக்கள்
ADDED : ஏப் 27, 2024 05:34 AM

ஒட்டன்சத்திரம்: பாழ்படும் பூங்கா இடங்கள், மயானத்தில் இல்லை வசதிகள் என்பன போன்ற பிரச்னைகளுடன் ஒட்டன்சத்திரம் 14 வது வார்டு மக்கள் பரிதவிக்கின்றனர்.
நல்லாக்கவுண்டர் நகர், கைராசிநகர் ,திண்டுக்கல் - பழநி ரோடு, போலீஸ் குடியிருப்பு, ஏ.எஸ்.எம். பேட்டை பகுதிகளை உள்ளடக்கிய இந்த வார்டில் மயானத்திற்கு சுற்றுச்சுவர் , மின்விளக்கு, தண்ணீர் வசதி இல்லை . நல்லாக்கவுண்டன் நகரில் கழிவுநீர் வெளியேற வசதி இல்லாமல் ரோட்டில் ஓடுகிறது . கே. ஆர். அரசு மேல்நிலைப்பள்ளி கிழக்கு பகுதியில் செல்லும் ஓடை துார்வார படாமல் கழிவு நீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது . ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் இல்லாத நிலையில் அதுவும் கட்டப்பட்டுள்ளது. வார்டில் உள்ள பூங்காக்களுக்கு ஒதுக்கப்பட்ட இடம் பயன்பாடின்றி காணப்படுகிறது. கைராசி நகரில் இருந்து தும்மிச்சம்பட்டி புதுார் செல்லும் ரோட்டில் தெரு விளக்கு வசதி இல்லை. பழுதான தெரு விளக்குகளும் உடனுக்குடன் மாற்றப்பட்டு வருகிறது.
குடிநீர் பிரச்னை இல்லை
கவிதா, குடும்பத் தலைவி, கைராசி நகர்: வார்டில் குடிநீர் பிரச்னை தீர்க்கப்பட்டு உள்ளது. இன்னும் குடிநீர் கொண்டு வருவதற்கு புதிதாக குழாய்களும் போடப்பட்டுள்ளது. ரேஷன் கடைக்கு சொந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. அருகிலே ரேஷன் கடை இருப்பதால் சிரமம் இன்றி பொருள்களை வாங்கி செல்கிறார்கள். பழுதான தெரு விளக்குகள் உடனுக்குடன் மாற்றப்பட்டு வருகிறது.
அரைகுறையாக பணி
கே.சிவராஜ், பா.ஜ, நகர செயலாளர்: நல்லாக் கவுண்டர் நகரில் கழிவுநீர் வெளியேற வழி இல்லாததால் வீடுகளுக்கு முன்பு கழிவுநீர் தேங்கியுள்ளது. தெருக்களில் உள்ள ரோடுகள், சாக்கடையை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகளால் விஷ பூச்சிகள் குடிபுகும் நிலை உள்ளது. வார்டுக்குள் புதிதாக குழாய்கள் அமைத்த போது ரோடுகளை சேதப்படுத்தி விட்டனர். இவற்றை அரைகுறையாக சரி செய்துள்ளனர். இதனை சீரமைக்க வேண்டும்.
குப்பை பிரச்னை இல்லை
சாரதா, குடும்பத் தலைவி, நல்லாகவுண்டர்நகர்: திண்டுக்கல் பழநி ரோட்டில் குப்பை கொட்டப்பட்டு வந்ததால் வார்டுக்குள் துர்நாற்றம் அடித்து வந்தது. குப்பை எல்லாம் அள்ளி அப்புறப்படுத்தப்பட்டு விட்டது. தற்போது குப்பை அள்ளி நகராட்சியின் குப்பை கிடங்கிற்கு கொண்டு சென்று விடுகின்றனர். இதனால் வார்டுக்குள் துர்நாற்றம் இல்லை. இதன் மூலம் நீண்ட நாள் பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றம்
ரமேஷ், கவுன்சிலர், (தி.மு.க.,): ஒட்டன்சத்திரம் பழநி ரோட்டில் கொட்டப்பட்டிருந்த குப்பை அனைத்தும் அகற்றப்பட்டுள்ளது. ஜக்கம்மா கோவில் தெரு ரோடு புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மயானத்திற்கு சுற்றுச்சுவர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரோ்டுப் பணிகள் முடிந்தவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். நல்லா கவுண்டன் நகரில் கழிவுநீர் வாய்க்கால் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓடை அருகே செல்லும் ரோட்டில் தெரு விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நல்லா கவுண்டர் நகரில் விரைவில் பூங்கா அமைக்கப்படும். அங்கன்வாடி மையத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும். நகரின் விரிவாக்கப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும். பொதுமக்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

