நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார் : குடகனாறு வல்லுநர் குழு அறிக்கையை வெளியிட வேண்டும், குடகனாற்றில் கருவேல முட்புதர்களை அகற்ற வேண்டும், வேடசந்துார் நகர் பகுதியில் சேதமடைந்த பேவர் பிளாக் சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ,ஆத்து மேட்டில் இந்திய கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர், திண்டுக்கல் மாநகர செயலாளர் கிருஷ்ணசாமி, நத்தம் தாலுகா செயலாளர் வெள்ளைச்சாமி பேசினர்.