/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மலைவாழ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
மலைவாழ் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 17, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : சிறுமலை வேளாண்பண்ணையைச் சேர்ந்த பழங்குடியின இளைஞர் வெள்ளையன் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய சவேரியார் மீது எஸ்சிஎஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தியும், முதல் தகவல் அறிக்கையில் வெள்ளையனை பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்பதை குறிப்பிட மறுக்கும் திண்டுக்கல் தாலுகா போலீசாரை கண்டித்து தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்டச் செயலர் அஜாய்கோஷ் தலைமை வகித்தார். விவசாயிகள் சங்கத்தின் மாநில பொருளாளர் பெருமாள், மாவட்டச் செயலர் ராமசாமி, தலைவர் பெருமாள், மலைவாழ் சங்கத்தின் மாவட்டத் தலைவர் செல்லையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

