ADDED : செப் 11, 2026 01:00 AM

அ நிறம் | அளவு
சாணார்பட்டி: சாணார்பட்டி சார்பதிவாளர் அலுவலகம் எதிரே பா.ஜ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் சாணார்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரப்பதிவு நடவடிக்கைகளில் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய வேண்டும், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்யப்பட்டிருந்தால் விசாரணை நடத்தி சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
மாவட்ட செயலாளர்கள் கார்த்திகைசாமி, சபாபதி, ஒன்றிய தலைவர் மணிகண்டன், மாவட்ட துணைத்தலைவர்கள் சொக்கர், வீரஜோதி, என்.ஜி.ஓ., மாவட்ட தலைவர் சுரேஷ், ஒன்றிய பொதுச்செயலாளர் வீரப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். வடக்கு ஒன்றிய தலைவர் பாண்டி நன்றி கூறினார்.
