ADDED : செப் 13, 2026 01:33 AM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க., சார்பில் மணிக்கூண்டு அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னாள் அமைச்சர் பெரியசாமி தலைமை வகித்து பேசினார். முன்னாள் அமைச்சர் சக்கரபாணி, எம்.எல்.ஏ., செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர்கள் மோகன், காமாட்சி, மேயர் இளமதி, மாநகர செயலாளர் ராஜப்பா, சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
