/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அதிக வித்தியாசத்தில் திண்டுக்கல்லில் வெற்றி: அமைச்சர் சக்கரபாணி
/
அதிக வித்தியாசத்தில் திண்டுக்கல்லில் வெற்றி: அமைச்சர் சக்கரபாணி
அதிக வித்தியாசத்தில் திண்டுக்கல்லில் வெற்றி: அமைச்சர் சக்கரபாணி
அதிக வித்தியாசத்தில் திண்டுக்கல்லில் வெற்றி: அமைச்சர் சக்கரபாணி
ADDED : மார் 25, 2024 07:01 AM

ஒட்டன்சத்திரம், : ''இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வகையில் திண்டுக்கல் தொகுதியில் அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம்,'' என அமைச்சர் சக்கரபாணி பேசினார்.
இண்டியா கூட்டணியின் மா. கம்யூ., திண்டுக்கல் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆதரவாக ஒட்டன்சத்திரம் ஒன்றியம் லெக்கையன்கோட்டை, அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி ஊராட்சிகளில் பிரசாரம் செய்த அவர் பேசியதாவது:
கடந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்திலே அதிக ஓட்டு வித்தியாசத்தில் திண்டுக்கல் தொகுதி தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்றார். இந்திய அளவில் மூன்றாவது இடம் கிடைத்தது. ஆனால் இம்முறை இந்தியாவிலே அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடிப்போம். ஒட்டன்சத்திரம் தொகுதியில் 30 ஆண்டுக்கு குடிநீர் பிரச்னை வராத வகையில் திட்டம் வடிவமைக்கப் பட்டுள்ளது. அதற்காக முதல்வர் ரூ.1000 கோடி நிதி ஒதுக்கி உள்ளார். 100 நாள் வேலை திட்டத்தில் சம்பளம் ரூ.400 ஆக உயர்த்தி வழங்கப்படும் என காங்கிரசும், 100 நாள் வேலையை 150 நாட்களாக உயர்த்தி தரப்படும் என முதல்வரும் அறிவித்துள்ளார் என்றார்.