/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மூதாட்டியிடம் நகை பறித்த திண்டுக்கல் வாலிபர் கைது
/
மூதாட்டியிடம் நகை பறித்த திண்டுக்கல் வாலிபர் கைது
ADDED : மார் 22, 2024 05:16 AM
திண்டுக்கல்: துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை அடுத்த இனாம் மணியாச்சி அத்தைகொண்டான் சாலையை சேர்ந்தவர் குருவத்தாய் 66. தனது பேத்தியை பள்ளி வேனில் ஏற்றி அனுப்பிவிட்டு வீட்டுக்கு நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த ஒரு சிறுவன் உட்பட இருவர் அவர் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் செயினை பறித்து சென்றனர். இது குறித்து குருவத்தாய் போலீசில் புகார் செய்தார்.
கோவில்பட்டி மேற்கு போலீசார் அங்கு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது டூவீலரில் வந்த திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நல்லா குளத்தைச் சேர்ந்த சதாம் உசேன் மகன் சையது அலி ஹக்கீம் 27, மற்றும் அவருடன் வந்த 17 வயது சிறுவன் ஆகியோரிடம் நகை இருந்தது தெரியவந்தது. நகையை மீட்ட போலீசார் அவர்களை கைது செய்தனர்.

