ADDED : மே 17, 2026 07:20 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், மே 18-
மாவட்ட அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். துணை செயலாளர் ராமுதாய், துணைத்தலைவர் ஜோசப் ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் மூன்று சக்கர டூவீலர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். ஒன்றிய செயலாளர் கணேசன் உள்பட மாற்றுத்திறனாளிகள் பலர் பங்கேற்றனர்.
