ADDED : மார் 25, 2024 07:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : அய்யலுாரில் சாய் ஸ்போர்ட்ஸ் அகாடமி, நிகான் சோட்டோகான் கராத்தே சன்குகாய் இணைந்து மாவட்ட அளவில் கராத்தே போட்டி நடந்தது.
கட்டா, குமித்தோ பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. சாய் ஸ்போர்ட்ஸ் நிறுவனர் தினேஷ்வரன் தலைமை வகித்தார். உலக கராத்தே சங்க நடுவர்கள் காளீஸ்வரன், ரஞ்சித் முன்னிலை வகித்தனர். பா.ஜ.க., மாவட்ட பொருளாதார செயலாளர் ராமர், ஒன்றிய தலைவர் நாகராஜன், இளைஞரணி தலைவர் சக்திவேல், சாய் அகாடமி பயிற்சியாளர் மோகன்குமார் பங்கேற்றனர்.

