ADDED : ஜூலை 28, 2024 07:11 AM

வத்தலக்குண்டு, : வத்தலக்குண்டு மவுன்ட் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திண்டுக்கல் மாவட்ட உ பிரிவு குறுவட்ட போட்டிகள் நடந்தன. இதில் 14, 17, 19, வயது உட்பட்டோருக்கான எரிபந்து போட்டியில் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை, பள்ளபட்டி, அம்மையநாயக்கனுாரைச் சேர்ந்த பள்ளிகள் பங்கேற்றன.
போட்டிகளை பள்ளி தாளாளர்கள் நோரிஸ் நடராஜன், லின்னி நோரிஸ், முதல்வர் ஆத்தியப்பன் ,அன்னை வேளாங்கண்ணி பள்ளி முதல்வர் பால்ராஜ் துவக்கி வைத்தனர்.
14 17 வயது பிரிவில் அம்மையநாயக்கனுார் காவியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர். 19 வயது பிரிவில் அழகம்பட்டி ஆதிதிராவிடர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். 14, 17,19 வயது பிரிவில் வத்தலக்குண்டு ஜெயசீலன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நிலக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளி, காவியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடம் பிடித்தன.