ADDED : மே 31, 2026 09:50 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஜூன் 1-
தமிழக அரசு டாக்டர்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் மதுரையில் நடந்தது. தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலராக பணியாற்றும் டாக்டர் சீனிவாசன் மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநில செயலாளராக கோயம்புத்துாரை சேர்ந்த கனகராஜ், பொருளாளராக திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபுசங்கர், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
