/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அவசர சிகிச்சை பிரிவு பணிக்கு வரமறுக்கும் டாக்டர்கள்
/
அவசர சிகிச்சை பிரிவு பணிக்கு வரமறுக்கும் டாக்டர்கள்
அவசர சிகிச்சை பிரிவு பணிக்கு வரமறுக்கும் டாக்டர்கள்
அவசர சிகிச்சை பிரிவு பணிக்கு வரமறுக்கும் டாக்டர்கள்
ADDED : ஜூலை 30, 2024 05:48 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் பணியாற்ற டாக்டர்கள் தயக்கம் காட்டும் நிலையில் இங்குள்ள 5 டாக்டர்களும் கூடுதல் பணிச்சுமையால் அவதிப்படுகின்றனர்.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இங்குள்ள மருத்துவமனை நுழைந்ததும் முதல் தளத்தில் அவசர சிகிச்சை பிரிவு உள்ளது. இங்கு 11 டாக்டர்கள் சுழற்சி முறையில் பணியிலிருக்க வேண்டும். ஆனால் தற்போது 5 டாக்டர்கள் மட்டுமே பணியாற்றுகின்றனர்.
அவசர சிகிச்சை பிரிவில் பணிகள் அதிகளவில் பணி இருக்கும் என்பதால் இங்கு பணியாற்ற டாக்டர்கள் யாரும் ஆர்வம் காட்டாமல் ஒதுங்குகின்றனர். இதை மீறி வரும் டாக்டர்களும் சில மாதங்களிலே வேறு ஊர்களுக்கு பணி மாறுதல் கேட்டு செல்கின்றனர். இதனால் 4 மாதமாக 5 டாக்டர்களே மாறி மாறி பணிச்சுமையோடு பணியாற்றுகின்றனர். இதனால் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளை முறையாக கவனிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தொடரும் இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் டாக்டர்கள் காலிப்பணியிடங்களை நிரப்ப சுகாதாரத்துறை நிர்வாகம் முன் வர வேண்டும்.இதன்மீது மாவட்ட நிர்வாகமும் கவனம் செலுத்த வேண்டும்.