ADDED : ஆக 18, 2024 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : மாவட்டத்தில் மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கான மனுக்களை அளிக்க கலெக்டர் அலுவலகத்தில் நேற்று , நாளை , நாளை மறுதினம் 3 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுவதாக சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது.
பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம் என கலெக்டர் பூங்கொடி தெரிவித்துள்ளார். நேற்று 50 க்கு மேற்பட்ட பெண்கள் உரிமைத் தொகைக்கு விண்ணப்பிக்க கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

