/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இ-பாஸ் சந்தேகம் போன் எண் அறிவிப்பு
/
இ-பாஸ் சந்தேகம் போன் எண் அறிவிப்பு
ADDED : மே 08, 2024 05:32 AM
திண்டுக்கல் : கொடைக்கானல் இ--பாஸ் பெற விண்ணப்பிப்பது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய போன் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றஉத்தரவின்படி கொடைக்கானலிற்கு வரும் வெளி மாநிலம், மாவட்டம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் நேற்று முதல் ஜூன் 30 வரை இ--பாஸ் பதிவு செய்து வர தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பயணிகள் ''epass.tnega.org” என்ற இணைய முகவரியில் விபரங்களைபதிவேற்றம் செய்து இ--பாஸ் பெற்றுக்கொள்ளலாம். விண்ணப்பிப்பது , உள்ளூர் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறுவது தொடர்பாக ஏற்படும் சந்தேகங்களுக்கு 0451-2900233, 94422 55737 என்ற எண் வாயிலாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

