ADDED : ஜூன் 24, 2026 07:41 PM
அ நிறம் | அளவு
நத்தம், ஜூன் 25
நத்தம் தாலுகா அலுவலகம் முன் இ.கம்யூ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தாலுகா செயலாளர் வெள்ளைச்சாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மணிகண்டன், பொருளாளர் கிருஷ்ணசாமி, துணைச்செயலாளர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முளையூரில் தனிநபர் ஆக்கிரமித்துள்ள பாதையை நீதிமன்ற உத்தரவுப்படி அகற்ற வேண்டும், ஏரக்காபட்டி மயானப்பகுதியில் தெருவிளக்கு அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். தாலுகா குழு உறுப்பினர்கள் தவநுாதன், பொன்னுச்சாமி, அரவிந்த், காஜாமைதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
