தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா

பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா

பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா


ADDED : ஜூலை 15, 2026 10:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 10:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல், ஜூலை 16-

திண்டுக்கல் காந்திஜி நினைவு நடுநிலைப்பள்ளியில் முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. தலைமையாசிரியர் பாலாஜி சுப்பிரமணி தலைமை வகித்தார். பள்ளி நிர்வாகி பத்மநாபன் பேசினார். மாணவர்களுக்கு பேச்சு, கவிதை, பாட்டு போட்டிகள் நடத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஜாகீர் உசேன் நினைவு சிறுபான்மையினர் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவுக்கு தாளாளர் ஜாகீர் உசேன் தலைமை வகித்து காமராஜரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து கல்வியில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்கள், போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன. பள்ளி நிர்வாகி அப்துல் முத்தலீப் உள்பட பலர் பங்கேற்றனர்.

பேகம் சாஹிபாநகரம் துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை பாத்திமா மேரி தலைமையிலும் அசனாத்புரம் துவக்கப்பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் பெனாசிர் பேகம் தலைமையிலும் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி கல்வி வளர்ச்சி நாளை கொண்டாடினர்.

சித்தையன்கோட்டை:

சேடபட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வகித்தார். ஆசிரியர் ராமு வரவேற்றார். பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. எழுது பொருட்கள், மஞ்சப்பை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

வடமதுரை:

வடமதுரை கலைமகள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த காமராஜர் பிறந்த நாள் விழாவிற்கு தாளாளர் பெருமாள் தலைமை வகித்தார். செயல் இயக்குனர் சுப்பம்மாள் முன்னிலை வகிததார். மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன.

தங்கம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுனர் சுமதி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் அனுராதா வரவேற்றார். மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, கவிதை போட்டி நடத்தி பரிசு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us