ADDED : மார் 30, 2024 04:23 AM
தேர்தல் பார்வையாளர் ஆய்வு
பழநி : திண்டுக்கல் லோக்சபா தேர்தல் செலவினங்களை கண்காணிக்க ஐ.ஏ.எஸ்., அதிகாரி ஜரோன்தே விஷால் தஷ்ரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பழநி- ஒட்டன்சத்திரம், பழநி -கொடைக்கானல் சாலைகளில் வாகன சோதனைகளில் ஈடுபட்டுள்ள பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழு பணிகளை ஆய்வு செய்தார். பணி பதிவேடுகள் முறையாக பராமரிக்கப்படுவது, தேர்தல் நடத்தி விதிமுறைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தார். அய்யம்பாளையம், சாமிநாதபுரம் பகுதி சோதனை சாவடிககளிலும் ஆய்வு மேற்கொண்டார். தேர்தல் நடத்தி விதிமுறைகள் உள்ளிட்ட புகார்களுக்கு 0451-2 461 1448, 88074 91563 ஐ தொடர்பு கொள்ள தெரிவிக்கப்பட்டுள்ளது.
100 சதவீதம் ஓட்டு தீர்மானம்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட சிவாஜி தலைமை மன்றம் சார்பில் தலைவர்கள் தினம் மாவட்ட தலைவர் திருப்பதி தலைமையில் கிழக்கு ரத வீதி அலுவலகத்தில் நடந்தது. செயலாளர் தண்டபாணி முன்னிலை வகித்தார். துணை த்தலைவர் மாரியப்பன் வரவேற்றார். கவுரவ ஆலோசகர் டால்டன், நிர்வாகிகள் சஞ்சய்குமார், தவசிநாகராஜன், கண்டி சங்கரன், முத்துக்குமார், சத்தியன் பங்கேற்றனர். தியாகிகள் பகத்சிங், சத்தியமூர்த்தி படங்களுக்கு மரியாதை செய்தனர். தேர்தலில் 100சதவிதம் ஓட்டளிக்க மக்களிடம் வலியுறுத்துவது என தீர்மானம் நிறைவேற்றினர்.நிர்வாகி கவுதமன் நன்றி கூறினார். பொருளாளர் வெங்கிடு ஏற்பாடுகளை செய்தார்.
