ADDED : ஜூலை 31, 2026 08:24 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஆக.1
தமிழ்நாடு மின்வாரிய ஊழியர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கம் சார்பில் திண்டுக்கல் மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலாளர் அழகர்சாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் வடிவேல், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கேசவன் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச்செயலாளர் சரவணன், மாநிலத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் சுரேஷ் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி இறந்தவர்களுக்கு அரசு பணி வழங்கியது போல் மின்வாரியத்தில் மின்சாரம் தாக்கி இறந்த 240 பேரின் வாரிசுதாரர்களுக்கு அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.
