ADDED : ஆக 03, 2026 09:11 PM
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறையில் வீட்டின் மொட்டை மாடியில் இருந்து தவறி கீழே விழுந்த பொறியாளர் பலியானார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் ஸ்ரீராம் 27. திருமணம் ஆகவில்லை. இவர் கரிக்காலி சிமெண்ட் ஆலையின் ஒப்பந்த பணி பொறியாளர். குஜிலியம்பாறை வி.ஐ.பி., நகரில் வாடகைக்கு குடியிருந்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் மொட்டை மாடிக்கு சென்றார். அங்குள்ள சுற்றுச் சுவற்றில் உட்கார்ந்து இருந்தார். பின் நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே விழுந்த இடம் அந்த வீட்டிற்கும் ஒரு எலக்ட்ரிக் கடைக்கும் இடைப்பட்ட பகுதி என்பதாலும், அந்த இடைப்பட்ட சந்தை அடைத்து வைத்திருந்ததாலும், இரவு முழுவதும் அவரை யாரும் கவனிக்க வில்லை. நேற்று காலை கடையைத் திறந்த நபர்கள், அந்த சந்துக்குள் சென்றபோது, ஸ்ரீராம் கீழே விழுந்து மயங்கி கிடந்தார். அவரை கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்தனர். அங்கு ஸ்ரீராம் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். குஜிலியம்பாறை போலீசார் விசாரிக்கின்றனர்.
