/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
விவசாயிகள் அடையாள அட்டை பணி துவக்கம்
/
விவசாயிகள் அடையாள அட்டை பணி துவக்கம்
ADDED : பிப் 27, 2025 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை; குஜிலியம்பாறை ஒன்றியத்தில் 17 ஊராட்சிகள், பாளையம் பேரூராட்சி உள்ளது. விவசாயிகளுக்கான தனித்துவ அடையாள அட்டை வழங்கும் பணிகள் துவங்கி நடைபெற்று வருகின்றன.இந்த அட்டைகள் என்பது ஆதார் அட்டைகளைப் போல் விவசாயிகளுக்கான நிலம் சம்பந்தப்பட்ட பல்வேறு வகையான தகவல்களை உள்ளடக்கி சலுகைகளை பெற முக்கிய ஆதாரமாக உள்ளது.
இந்த அட்டை பெற விரும்புவோர் தங்களுக்கான ஆதார் கார்டு, அதற்கான அலைபேசி எண், கம்ப்யூட்டர் பட்டா, சிட்டா இரண்டு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ உடன் ஊராட்சி வாரியாக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களை தொடர்பு கொண்டு கட்டணம் இன்றி நிலத்தை பதிவு செய்யலாம்.

