ADDED : ஆக 10, 2024 05:38 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல் : விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்க வேண்டும்.
விவசாயத்தில் கார்ப்ரேட் நிறுவனங்களை அனுமதிக்க கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் மணிக்கூண்டு அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பெருமாள் தலைமை வகித்தார். சங்க மாவட்ட தலைவர் நிக்கோலஸ், எஸ்.யு.சி.ஐ.,மாவட்ட தலைவர் சுருளி ஆண்டவர், தலைவர் ராமசாமி, விவசாய தொழிலாளர் சங்க தலைவர் வசந்தாமணி பங்கேற்றனர்.
