ADDED : ஜூலை 01, 2026 08:20 PM
அ நிறம் | அளவு
வடமதுரை, ஜூலை 2-
வடமதுரை கன்னிமார்பாளையத்தில் செல்வ விநாயகர், மருத காளியம்மன், வீரஜக்கம்மாள் கோயில் உற்ஸவ திருவிழா 3 நாட்கள் நடந்தது. கரகம் ஜோடித்தலுடன் துவங்கி மாவிளக்கு, முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல், எருதோட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடந்தன. 15 எருமை கிடாக்கள் பாரம்பரிய வழிபாட்டு முறையில் வெட்டி புதைக்கப்பட்டன. மஞ்சள் நீராட்டு, அம்மன் கங்கை செல்லுதலுடன் திருவிழா நிறைவடைந்தது.
இதுபோல் கொல்லப்பட்டி சிக்கம்மாள்புரம் சிக்கம்மாள் கோயிலில் திருவிழா நடந்தது. கோயில் வீட்டில் இருந்து பூச்சாடு புறப்படுதலுடன் துவங்கி பொங்கல் வைத்தல், பிறந்த வீட்டு பெண்கள், மாமன்கள் கும்பிடு வாங்குதல் என பாரம்பரிய நிகழ்ச்சிகள் நடந்தன.
