ADDED : ஜூலை 02, 2026 05:01 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், ஜூலை 3
திண்டுக்கல் பழைய கரூர் சாலையில் பிரியாணி கடை உள்ளது. நேற்று காலை 9:45 மணிக்கு இந்த கடையில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்த மாவட்ட தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் மயில்ராஜ் தலைமையிலான மீட்புக்குழுவினர் 20 நிமிட போராட்டத்திற்கு பிறகு தீயை அணைத்தனர். ஆனாலும் கடையில் இருந்த பொருட்கள் தீயில் கருகியது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
