தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போதை மாத்திரை பயன்படுத்திய ஐவர் கைது-

போதை மாத்திரை பயன்படுத்திய ஐவர் கைது-

போதை மாத்திரை பயன்படுத்திய ஐவர் கைது-


ADDED : ஆக 05, 2026 09:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 05, 2026 09:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல், ஆக.6-

திண்டுக்கல்லில் போதை, கஞ்சா கடத்தல், புழக்கத்தை கட்டுப்படுத்த எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவில் தனிப்படை  அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

மேட்டுப்பட்டி பகுதியில் சிலர் சட்ட விரோதமாக போதை மாத்திரைகள்  பயன்படுத்துவதாக எஸ்.பி.,க்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் தெற்கு இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன், எஸ்.ஐ., ஜான்சன் ஜெயக்குமார்  தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். 

மேட்டுப்பட்டி பாஸ்கா மேடை அருகே சந்தேகப்படும்படி பதுங்கி இருந்தவர்களை பிடித்து விசாரித்ததில் அதே பகுதியை சேர்ந்த நோவின்ராஜ் 20, நோபில் அலெக்ஸ் 22, நந்தக்குமார் 20, பாலகிருஷ்ணன் 19, ஆர்.கே.,நகர் அஜய் ஆண்டனி 19, என தெரிந்தது. அவர்கள் போதை மாத்திரை பயன்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து ஐவரையும் கைது செய்த போலீசார், 725 போதை மாத்திரைகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us