/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குரங்குகள் பிடிக்க வனத்துறை ஆய்வு
/
குரங்குகள் பிடிக்க வனத்துறை ஆய்வு
ADDED : மார் 25, 2024 06:58 AM
திண்டுக்கல், : திண்டுக்கல் திருச்சி ரோடு காந்திஜிநகரில் 4 குரங்குகள் சுற்றித்திரிகின்றன. இவை மலை பகுதிகளிலிருந்து தண்ணீருக்காக குடியிருப்புகளுக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகிறது. அங்கும் இங்குமாய் வீடுகளில் தாவி அச்சுறுத்துகிறது.
திறந்திருக்கும் வீடுகளில் புகுந்து உணவுகளை சாப்பிடுகின்றன. இதைக்கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக சிறுமலை வனத்துறை ரேஞ்சர் மதிவாணன் தலைமையில் அதிகாரிகள் திருச்சி ரோடு காந்திஜிநகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். குரங்குகள் குறித்த விபரங்களை பொது மக்களிடம் கேட்டறிந்து மீண்டும் குரங்குகளை கண்டால் அச்சப்படாமல் எங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறி சென்றனர்.

