/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் தொடரும் காட்டுத் தீ
/
கொடைக்கானலில் தொடரும் காட்டுத் தீ
ADDED : ஏப் 27, 2024 01:50 AM

கொடைக்கானல்:கொடைக்கானல் வனப்பகுதியில் தொடர்ந்து எரியும் காட்டுத் தீயால் ஏராளமான வன நிலங்கள் தீக்கிரையாயின.
கோடை வெயில் மலைப்பகுதியில் தகிக்கும்நிலையில் வனப்பகுதியில்உள்ள புல் உள்ளிட்ட தாவரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. சில தினங்களாக கொடைக்கானல் பூம்பாறை வனப்பகுதியான பாரிகோம்பை, வெம்படி, சந்தனப்பாறை, மாணிக்கம் குடை தொட்டி உள்ளிட்ட வனப்பகுதிகள் தீயால் பற்றி எரிந்தது.
நேற்றும் விடாது எரிந்த தீயால் வனத்திலுள்ள மரங்கள் கருகியது. தீயணைப்புத்துறை, வனத்துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் போராடி வருகின்றனர். சூறைக்காற்று, சுட்டெரிக்கும் வெயிலால் அந்நிய மரங்கள் சோலை கொளுந்து விட்டு எரிகிறது.
காட்டு தீயால் புகை அருகிலுள்ள கிராம பகுதி வரை பரவி சுவாச கோளாறு பிரச்னையை ஏற்படுத்துகிறது. மேல் மலைப்பகுதி முழுமையும் புகை மண்டலமாக காட்சியளிப்பதால் சுற்றுச்சூழல் வெகுவாக பாதித்துள்ளது.

