ADDED : ஏப் 08, 2024 05:47 AM

அ நிறம் | அளவு
கொடைக்கானல் : - கொடைக்கானல் மெயின் ரோட்டில் உள்ள பெருமாள் மலை முருகன் கோயில் பகுதியில் வருவாய், பட்டா நிலங்களில் பரவிய காட்டுத் தீயால் கடும் புகை எழுந்தது.
அருகில் வனப்பகுதி உள்ள நிலையில் வனத்துறையினர் தீ பரவாமல் தடுக்க தீத் தடுப்பு கோடுகளை அமைத்து வருகின்றனர். புகை மண்டலத்தால் பெருமாள்மலை சுற்றிய குக்கிராமங்களில் கண் எரிச்சல், சுவாச பிரச்னையால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
