ADDED : பிப் 26, 2025 06:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி 23 வது வார்டில் துணை சுகாதார நிலையம் அமைக்க ரூ. 45 லட்சத்தில் திட்டமிடப்பட்டது அதற்கான பணிகளை எம்.எல்.ஏ.,செந்தில்குமார் அடிக்கல் நாட்டி துவங்கி வைத்தார்.
நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, தி.மு.க., மாவட்ட மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன், நகர செயலாளர் வேலுமணி கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து நெய்க்காரப்பட்டி, பாலசமுத்திரம் பேரூராட்சி பகுதிகளில் முதல்வர் மருந்தகத்தை எம்.எல்.ஏ., செந்தில்குமார் திறந்து வைத்தார்.

