ADDED : ஜூலை 28, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
வடமதுரை, ஜூலை 29-
வடமதுரை வட்டார களஞ்சியம், சுகம் வட்டார மகளிர் சுயஉதவி குழுக்கள் கூட்டமைப்பின் 24ம் ஆண்டு பொதுக்குழு கூட்டம் வடமதுரையில் நடந்தது. வட்டார தலைவிகள் ராணி, புவனேஷ்வரி, சீதாலட்சுமி தலைமை வகித்தனர். திண்டுக்கல் களஞ்சிய இயக்க மண்டல ஒருங்கிணைப்பாளர் தேவநேசன், சுகாதார மண்டல ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீராம் முன்னிலை வகித்தனர்.
வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் தயா, நைனார் முகமது அம்பலம், சுகம் வட்டார ஒருங்கிணைப்பாளர் விஷ்ணுபிரியா, பொறியாளர் மாரிமுத்து பங்கேற்றனர்.
