/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வன விலங்கு தாக்கியதில் ஆடுகள் பலி
/
வன விலங்கு தாக்கியதில் ஆடுகள் பலி
ADDED : மார் 29, 2024 06:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி : பழநி நெய்க்காரப்பட்டி அ.கலையம்புத்துார் பகுதியில் வன விலங்கு தாக்கியதில் 10 ஆடுகள் பலியாகின.
பழநி நெய்க்காரப்பட்டி அருகே அ.கலையம்புத்துார் சேர்ந்த நாகராஜ் 55, ஆடுகள் வளர்த்து வந்தார்.
நேற்று மதியம் ஆடுகளை மர்ம விலங்கு கடித்த காயத்துடன் விழுந்து கிடந்தன. கால்நடை மருத்துவர் முருகன் தலைமையில் ஆய்வு செய்தனர்.
வன விலங்குகள் கடித்ததில் பாதிக்கப்பட்ட 13 ஆடுகளில் 10 ஆடுகள் இறந்தது.
மூன்று ஆடுகள் சிகிச்சையில் உள்ளன. ஆடுகளை தாக்கிய விலக்கு குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

