ADDED : ஜூலை 12, 2026 07:32 PM
அ நிறம் | அளவு
நத்தம்: அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில், பாலியல் வன்முறை, போதை கலாச்சாரம், சாதிமத வேறுபாடு இல்லாத தமிழகம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நத்தம் வட்டார போக்குவரத்து அலுவலகம் முன், கையெழுத்து இயக்கம் நடந்தது.
தாலுகா தலைவர் வைதேகி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வினோத்குமார், தாலுகாச் செயலாளர் முருகன், இ.கம்யூ., தாலுகா செயலாளர் வெள்ளைச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏராளமானோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கையெழுத்திட்டனர். தாலுகா நிர்வாகிகள் மனோஜ், காவேரி, ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
