ADDED : செப் 18, 2024 04:14 AM
திண்டுக்கல், : புரட்டாசி மாதம் தொடங்கிய நிலையில் காய்கறிகளின் தேவை அதிகரிப்பு வெங்காயம், தக்காளி விலை உயர்ந்து வருகிறது.
புரட்டாசி மாதம் நேற்று தொடங்கிய நிலையில் வீடுகளில் அசைவ உணவு குறைந்து சைவ உணவு அதிகரிப்பது வழக்கம். அதன்படி நேற்று வெங்காயம், தக்காளி போன்ற அத்தியாவசிய காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது.
திண்டுக்கல்லில் இரு தினங்களுக்கு முன்பு ரூ.40க்கு விற்ற தக்காளி நேற்று ரூ.60 க்கு விற்பனையானது. சின்ன வெங்காயம் ரூ.30 லிருந்து ரூ.40 முதல் ரூ.50, பெரிய வெங்காயம் ரூ.60 லிருந்து ரூ.80 க்கு விற்பனையானது. இவை சில்லரை வியாபாரக் கடைகளுக்கு வரும் போதுரூ.5 வரை கூடுதலாக விலைக்கு விற்பனையானது.
ஆனால் உழவர் சந்தையில் தக்காளி ரூ.40 , வெங்காயம் ரூ.50 க்கு விற்பனையானது.
அதே நேரத்தில் எலுமிச்சை விலையும் கணிசமாக உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ எலுமிச்சை ரூ.180 முதல் ரூ.200க்கு விற்பனையானது. உழவர் சந்தையில் ரூ.150க்கு விற்பனையானது.
ஒரு எலுமிச்சை ரூ.10க்கு விற்கப்பட்டது.புராட்சி மாதம் துவங்கியதால் காய்கறிகளின் விலை மேலும் உயரும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.
