ADDED : ஜூன் 19, 2026 03:00 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்:
நாகையகோட்டை ஹாஜி மு.காதர்சா நினைவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பாராட்டு விழா நடந்தது.
தலைமை ஆசிரியர் சிவக்குமார் தலைமை வகித்தார். பி.டி.ஏ., தலைவர் ஹக்கீம் முன்னிலை வகித்தார். முதுகலை தமிழ் ஆசிரியர் அமிர்தம் வரவேற்றார். மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டினர். உள்ளூர் பிரமுகர்கள் கரிமுல்லா, அப்துல் காதர், தங்கவேல், இளங்கோ, கார்மேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
