ADDED : மே 07, 2026 08:22 PM

ஒட்டன்சத்திரம், மே 8-
ஒட்டன்சத்திரம் பகுதியில் தடை பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது.
ஒட்டன்சத்திரம் நகராட்சி ,ஊராட்சி பகுதி கிராமங்களில் தினந்தோறும் டன் கணக்கில் குப்பை கொட்டப்படுகிறது. இவற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் காணப்படுகிறது. குறிப்பாக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய தடை பிளாஸ்டிக் பைகள் ( கேரி பேக்) அதிக அளவில் உள்ளது. இங்குள்ள ஓட்டல்கள், டீ கடைகள், பேக்கரிகள், இறைச்சி, மீன், கோழி கடைகள், மளிகைக் கடைகள், வர்த்தக நிறுவனங்களில் அதிகமாக உபயோகப்படுத்தப்படுகிறது. இத்தகைய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இவற்றின் பயன்பாடு குறையவில்லை. குப்பை கொட்டப்படும் இடங்களில் மக்கும் , மக்காத கழிவுகள் பிரிக்கப்படாமல் ஒரு சில இடங்களில் அப்படியே தீ வைத்து எரிக்க படுகிறது. இதனால் சுற்றுச்சூழல் மாசடைந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
