ADDED : ஆக 17, 2024 01:30 AM
தேவத்துார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் கலையரசி தேசிய கொடி ஏற்றினார் செவிலியர்கள் விஜயலட்சுமி, திவ்யா, பணியாளர் சின்னச்சாமி பங்கேற்றனர். இடையகோட்டை நேருஜி அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜான்வெல்பர் பொன்ராஜ் தேசிய கொடி ஏற்றினார். பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முகமது இஸ்மாயில் பங்கேற்றனர். பாலப்பன்பட்டி புதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஊராட்சித் தலைவர் சண்முகவேல் தேசிய கொடி ஏற்றினார். தலைமை ஆசிரியர் பாண்டியன், உள்ளாட்சி பிரதிநிதிகள் முத்துச்சாமி, முத்துலட்சுமி, இடைநிலை ஆசிரியர் வெங்கடேஷ் பங்கேற்றனர்.
வடமதுரை: ஒன்றிய அலுவலகத்தில் தலைவர் பி.தனலட்சுமி கொடியேற்றினார். முன்னாள் எம்.எல்.ஏ., பழனிசாமி, பி.டி.ஓ., நளினா, ஏ.பி.டி.ஓ., சுப்பிரமணி, துணைத்தலைவர் கே.தனலட்சுமி பங்கேற்றனர். பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் பத்மலதா முன்னிலையில் தலைவர் நிருபாராணிகணேசன் கொடியேற்றினார். தி.மு.க., நகர செயலாளர் கணேசன் பங்கேற்றார். வடமதுரை கலைமகள் மேல்நிலை பள்ளியில் தாளாளர் ஆர்.கே.பெருமாள், குரு மழலையர் துவக்கப் பள்ளியில் தாளாளர் பிரபாகரன், பாரதி துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை விஜயா, கலைமகள் மழலையர் துவக்கப் பள்ளியில் இயக்குனர் அருள்மணி, போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் கண்ணன் கொடியேற்றினர். கொம்பேறிபட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் வயநமசி முன்னிலையில் ஊராட்சி தலைவர் ராஜரத்தினம் கொடியேற்றினார்.
அய்யலுார்: பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் கருப்பன் கொடியேற்றினார். செயல் அலுவலர் அன்னலட்சுமி முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் அல்லிமுத்து, எழுத்தர் மோகன் பங்கேற்றனர். அய்யலுார் ரஞ்சித் மழலையர் துவக்கப் பள்ளியில் முதல்வர் மனோரஞ்சித் தலைமையில் தாளாளர் முனியாண்டி கொடியேற்றினார். அய்யலுார் ஆர்.வி.எஸ்., குமரன் கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் திருமாறன் தேசிய கொடியேற்றினார். அய்யலுார் தங்கம்மாபட்டி சக்திசாய் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இயக்குனர் சாந்தி முன்னிலையில் பள்ளி தாளாளர் ஸ்ரீதரன் கொடியேற்றினார்.
எரியோடு: பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் முத்துலட்சுமி கொடியேற்றினார். செயல் அலுவலர் சையது அபுதாகிர், தி.மு.க., நிர்வாகிகள் செந்தில்குமார், கார்த்திகேயன் பங்கேற்றனர். அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் நிர்மலா முன்னிலையில் பேரூராட்சி தலைவர் முத்துலட்சுமி, போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் முருகன், மின்வாரிய அலுவலகத்தில் உதவி மின்பொறியாளர் லட்சுமி கொடியேற்றினர். கலைவாணி மழலையர் துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஆபிரகாம் முன்னிலையில் நிறுவனர் சாவித்திரி கொடியேற்றினார். கோவிலுார் தோப்புபட்டி வித்யோதயா மெட்ரிக்குலேசன் பள்ளியில் தாளாளர் கிருஷ்ணவேணி முன்னிலையில் முதல்வர் ராமகிருஷ்ணன் கொடியேற்றினார். புதுரோடு இ.என்.பி., மழலையர் துவக்கப் பள்ளியில் தாளாளர் இளங்கோவன் கொடியேற்றினார். முதல்வர் ராமசந்திரபிரபு, ஒருங்கிணைப்பாளர் லிஸி முன்னிலை வகித்தனர்.
வேடசந்துார்: வேடசந்துார் ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி கொடி ஏற்றினார். பி.டி.ஓ., சரவணன் பங்கேற்றார். வேடசந்துார் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் எம்.எல்.ஏ., காந்திராஜன் கொடியேற்றினார். வேடசந்துார் காங்., அலுவலகத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவர் பஷீர் அகமது கொடியேற்றினார். வேடசந்துார் பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மேகலா கொடியேற்றினார். வேடசந்துார் பி.வி.எம்., மெட்ரிகுலேஷன் பள்ளியில் தாளாளர் சூடாமணி கொடியேற்றினார். தலைமை ஆசிரியர் செந்தில்குமார் பங்கேற்றனர். வேடசந்துார் சாய்பாரத் கலை அறிவியல் கல்லுாரியில் முதல்வர் வின்சென்ட் கொடியேற்றினார். சாய்பாரத் கல்வியியல் கல்லூரியில் முதல்வர் நர்மதாஸ்ரீ கொடியேற்றினார். வேடசந்துார் போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., ஜெய்கணேஷ் கொடியேற்றினார்.
தாடிக்கொம்பு:தாடிக்கொம்பு போலீஸ் ஸ்டேஷனில் எஸ்.ஐ., திருமலைராஜ் கொடி ஏற்றினார். தாடிக்கொம்பு குருமுகி வித்யாஷ்ரம் பள்ளியில் நிர்வாகி செந்தில் குமார் கொடியேற்றினார். தாளாளர் திவ்யா, தலைமை ஆசிரியர் சியாமளா பங்கேற்றனர்.
நத்தம்: நீதிமன்ற வளாகத்தில் நீதிபதி உதயசூரியா தேசிய கொடியேற்றினார். நத்தம் வக்கீல்கள் சங்க தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, செயலாளர் செந்தில்குமார் பங்கேற்றனர். முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் எம்.எல்.ஏ., தனது இல்லத்தில் தேசியக் கொடி ஏற்றினார். நத்தம் யூனியன் அலுவலகம் முன் ஒன்றியகுழு தலைவர் ஆர்.வி.என்.கண்ணன் தலைமை தாங்கி கொடியேற்றி காந்தி படத்திற்கு மரியாதை செலுத்தினார். யூனியன் ஆணையாளர்கள் மகுடபதி, துணைதலைவர் முத்தையா முன்னிலை வகித்தனர். நத்தம் பேரூராட்சி அலுவலகத்தில் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா தலைமை தாங்கி கொடியேற்றினார். செயல்அலுவலர் விஜயநாத், துணை தலைவர் மகேஸ்வரி சரவணன் பங்கேற்றனர். நத்தம் ராம்சன்ஸ் மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் தாளாளர் ராமசாமி கொடியேற்றினார். நத்தம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சரவணக்குமார், நத்தம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் தங்கமுனியசாமி, தீயணைப்பு நிலையத்தில் நிலைய அலுவலர் அம்சராஜன், மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், வனத்துறை அலுவலகத்தில் வனச்சரக அலுவலர் ஜெயசீலன்,அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜேசுதாசன் ஆகியோர் தலைமையில் தேசிய கொடி ஏற்றபட்டது.
பழநி: நகராட்சி அலுவலகத்தில் எம்.எல்.ஏ செந்தில்குமார் கொடியேற்றினார். நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி பங்கேற்றனர். ரயில்வே ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டர் துாய மணி வெள்ளைச்சாமி கொடியேற்றினார். எஸ்.ஐ.,கள் பொன்னுச்சாமி, மணிகண்டன் பங்கேற்றனர். ஹிந்து வியாபாரிகள் நல சங்கம் சார்பில் தலைமை அலுவலகம் முன்பு துணைத் தலைவர் குப்புசாமி தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் ஜெகன் கொடியேற்றினார். பழநி காங்., கட்சி சார்பில் நகரத் தலைவர் முத்துவிஜயன் தலைமையில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மண்டல தலைவர் வீரமணி, மாவட்ட துணை தலைவர் பத்மினிமுருகானந்தம் பங்கேற்றனர். பழநி அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் முன்னாள் மாணவி நிவேதா பங்கேற்றார். பள்ளி நிறுவனர் புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலர் பட்டாபிராமன், முதல்வர் மங்கையர்க்கரசி பங்கேற்றனர். பழநி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் நகர தலைவர் சண்முகநாதன் தலைமையில் நகர துணைத் தலைவர் திருஞானசம்பந்தம் தேசிய கொடி ஏற்றி வைத்தார். மாநில செயலாளர் மணிகண்ணன் பங்கேற்றனர். பழநி கே.ஜி.,வலசு தேவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் ஞானம், தேசியக்கொடி ஏற்றி வைத்தார். முதல்வர் சந்திரசேகர் பங்கேற்றனர். பழநி ஆயக்குடி விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் முதல்வர் காசி ஆறுமுகம் தேசிய கொடி ஏற்றினார். முன்னாள் மாணவர் நவநீத பிரபு பங்கேற்றனர்.
நிலக்கோட்டை: நிலக்கோட்டை எச். என். யு. பி. ஆர். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தலைவர் சுசீந்திரன் தலைமை வகித்து கொடியேற்றினார். நிர்வாகக்குழு உறுப்பினர் கருமலை பாண்டியன் முன்னிலை வகித்தார். தாளாளர் உதயசூரியன் வரவேற்றார். முதல்வர் குமரேசன் நன்றி கூறினார்.
கே. சி. எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் செயலாளர் அண்ணாமலை தலைமை வகித்தார். நிர்வாக இயக்குனர் நாகராஜன் முன்னிலை வகித்தார். முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி காமராஜர் கொடி ஏற்றி வைத்து பேசினார். முதல்வர் நடராஜன் வரவேற்றார்.
ஒட்டன்சத்திரம்: சங்கத் தலைவர் சரவணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுசீந்திரன் பொருளாளர் சரவணன் முன்னிலை வகித்தனர். செயலாளர் முகமது ரபிக் வரவேற்றார். தமிழ்நாடு இருசக்கர வாகனம் பழுது பார்ப்போர் முன்னேற்ற சங்கங்களின் கூட்டமைப்பு மாநில தலைவர் ஜானகிராமன், தி.மு.க., நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி தேசிய கொடி ஏற்றினர். சட்ட ஆலோசகர் பழனிச்சாமி பங்கேற்றனர்.
திண்டுக்கல் சீலப்பாடி ராகாளியம்மன் நகர் விஸ்தரிப்பு பகுதியில் குடியிருப்போர் நல சங்க சார்பில் சுப்ரமணியன் அம்பிகைநாதன் கொடியேற்றினார். நலச்சங்க தலைவர் மருதை முருகன் பேசினார். சின்னகருப்பன் நன்றி கூறினார்.திண்டுக்கல் ரயில்வே ஸ்டேஷனில் ஸ்டேஷன் மேலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். வர்த்தக மேலாளர் சத்தியமூர்த்தி, உதவி ஆய்வாளர்கள் கேசவன், மணிகண்டன், அருணோதயம் முன்னிலை வகித்தனர். சமூக ஆர்வலர் காஜாமைதீன் தேசிய கொடியை ஏற்றி வைத்து 25 தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். உதவி ஆய்வாளர் வெற்றிமணி, போக்குவரத்து ஆய்வாளர் பொன்னுசாமி, சமூக ஆர்வலர்கள் பெஞ்சமின் ஆரோக்கியம், சாதிக் கலந்து கொண்டனர்.
சாணார்பட்டி: திண்டுக்கல் எஸ்.எஸ்.எம்.வி., பள்ளியில் நந்தகோபால் தலைமையில் நடந்தது. முன்னாள் தலைமை ஆசிரியர் வின்சென்ட் ராஜேந்திரன் கொடி ஏற்றினார். பள்ளி தாளாளர் சந்திரமோகன் ஏற்பாடுகளை செய்தார்.

