தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ டி.என்.சி.ஏ., மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி

 டி.என்.சி.ஏ., மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி

 டி.என்.சி.ஏ., மாவட்டங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி


ADDED : செப் 04, 2026 04:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 04, 2026 04:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல்: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் மாவட்டங்களுக்கு இடையே 23 வயதிற்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட் போட்டி செப்.,1ல் எட்டு மாவட்டங்களில் துவங்கியது. திண்டுக்கல் மாவட்டத்தில் ஆர்.வி.எஸ்., மற்றும் ஸ்ரீவீ., கல்லுாரி மைதானங்களில் போட்டிகள் நடக்கிறது.

முதல் சுற்று போட்டி முடிவுகள் நீலகிரீஸ் அணி 44.5 ஓவர்களில் 143 ரன்கள் (ஜீவபாரதி 41, நியூகின்நலராஜ் 6 விக்கெட்டுகள்) எடுத்து 'ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய துாத்துக்குடி அணி 32 ஓவர்களில் 144/8 ரன்கள் (ஹரிசங்கர் 58, ரிஷாப்ராஜ் 6 விக்கெட்டுகள்) எடுத்து வெற்றி பெற்றது.

தஞ்சாவூர் அணி 34.1 ஓவர்களில் 100 ரன்கள் (ஜெயந்த் 6 விக்கெட்டுகள்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் அணி 10 ஓவர்களில் 106/1 ரன்கள் (ஸ்ரீமுகேஸ்வரன் 72, நாட் அவுட், சஞ்சய் வெங்கடேஷ்வர் 26, நாட் அவுட்) எடுத்து வெற்றி பெற்றது.

துாத்துக்குடி அணி 30.3 ஓவர்களில் 77 ரன்கள் (சாச்சன் கேமெரர் 31, பாரத் 4 விக்கெட்டுகள், கிஷோர்குமார் 3 விக்கெட்டுகள்) எடுத்தது.

எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் அணி 13 ஓவர்களில் 78/2 ரன்கள் (முகமதுபாஹீம் 40, நாட் அவுட், ஸ்ரீமுகேஸ்வரன் 32) எடுத்து வெற்றி பெற்றது.

நீலகிரீஸ் அணி 41 ஓவர்களில் 118 ரன்கள் (சஞ்சீவ் 30, ஹேமந்த் 3 விக்கெட்டுகள்) எடுத்து 'ஆல் அவுட்' ஆனது. எதிர்த்து விளையாடிய தஞ்சாவூர் அணி 21.4 ஓவர்களில் 120/2 ரன்கள் (முகேஸ்வரன் 34) எடுத்து வெற்றி பெற்றது.

நீலகிரீஸ் அணி 33.3 ஓவர்களில் 94 ரன்கள் (முகமது ரஷீம் 44, பாரத் 4 விக்கெட்டுகள், லக்ஷ்மண் ராகுல் 3 விக்கெட்டுகள்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய திண்டுக்கல் அணி 12.2 ஓவர்களில் 99/1 ரன்கள் (முகமதுபாஹீம் 37, ஸ்ரீமுகேஸ்வரன் 44, நாட் அவுட்) எடுத்து வெற்றி பெற்றது.

துாத்துக்குடி அணி 50 ஓவர்களில் 236/7 ரன்கள் (மனோஜ்குமார் 52, வைரம் சரத்குமார் 55, நாட் அவுட்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய தஞ்சாவூர் அணி 39.5 ஓவர்களில் 168 ரன்கள் (ராகுல்பிலிப் 45) எடுத்து தோல்வி அடைந்தது.

திண்டுக்கல் அணி மூன்று போட்டிகளிலும், துாத்துக்குடி அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்கு தகுதி பெற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us