ADDED : பிப் 26, 2025 06:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: பழைய ஓய்வூதியத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு ஒப்படைப்பு, உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.
சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை முறைப்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ சார்பில்
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் முபாரக் அலி, முருகன், ராஜாக்கிளி, ஜெசி, ஜோசப் சேவியர், ஆர்தர் தலைமை வகித்தனர். நிர்வாகி சுகந்தி முன்னிலை வகித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் வின்சென்ட் பால்ராஜ், மாநில உயர்மட்ட குழு பேட்ரிக் ரெய்மாண்ட் பேசினர். நிர்வாகி காஜா மைதீன் நன்றி கூறினார்.

