/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கரூர் அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்
/
கரூர் அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுக கூட்டம்
ADDED : மார் 24, 2024 05:55 AM

வேடசந்துார் : வேடசந்துாரில் கரூர் லோக்சபா அ.தி.மு.க., வேட்பாளர் தங்கவேல் அறிமுகம், ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
வேடசந்துார் ஆத்துமேடு கரூர் ரோட்டில் கரூர் லோக்சபா தொகுதிக்கான அ.தி.மு.க., கட்சி அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் சீனிவாசன் திறந்து வைத்தார். இதன் பின் அங்குள்ள திருமண மஹாலில் அ.தி.மு.க., வேட்பாளர் அறிமுகம் , ஆலோசனைக் கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம் தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி, மாவட்ட விவசாய அணி செயலாளர் ராஜமோகன் முன்னிலை வகித்தனர்.
வேடசந்துார் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜான் போஸ் வரவேற்றார். முன்னாள் அமைச்சர்கள் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், விஜயபாஸ்கர் பேசினர்.
கரூர் முன்னாள் தலைவர் சின்னச்சாமி, தே.மு.தி.க., மேற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார், எஸ்.டி.பி.ஐ., கிழக்கு மாவட்ட தலைவர் அபுதாஹிர், புதிய தமிழகம் மாநில துணை பொது செயலாளர் விஜயகுமார், ஒன்றிய, நகர செயலாளர்கள் லட்சுமணன், தண்டாயுதம், பழனியம்மாள், மலர்வண்ணன், பெருமாள், அறிவாளி பாலசுப்பிரமணி மணிமாறன், ராகுல்பாபா, மலர்கொடி அம்மையப்பன், மீனாட்சி சிவகுமார், பாபுசேட் பங்கேற்றனர்.

