ADDED : ஆக 24, 2024 04:19 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. பள்ளி செயலாளர்கள் மங்களராம்,காயத்ரி மங்களராம் தலைமை வகித்தனர். ஆசிரியை சாய்ரா பானு வரவேற்றார். பள்ளி முதன்மை முதல்வர் சந்திர சேகரன்,ஒருங்கிணைப்பாளர் பிரபா முன்னிலை வகித்தனர். மழலையர் பிரிவு மாணவர்களின் நடனம் நடந்தது. பிரிகேஜி மாணவர்கள் கிருஷ்ணன்,ராதை என மாறுவேடங்கள் அணிந்திருந்தனர். மாணவர்களுக்கு செயலர் காயத்ரி மங்களராம் பரிசு வழங்கினார். சத்யா நன்றி கூறினார்.
ஆசிரியை முருகேஸ்வரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை. பத்மநாபன், ராஜசுலோக்சனா, ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத் சக்கரவர்த்தி, விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், ஆசிரிய ஆசிரியைகள், மேலாளர் பிரபாகரன், ஜான் கிரிஸ்டோபர், ராஜசேகர், ஜெகதீசன் பங்கேற்றனர்.
