ADDED : ஆக 12, 2024 05:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : கூடைப்பந்து போட்டியில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக வெற்றி பெற்று பழநி அக் ஷயா பள்ளி மாணவர்கள் சாதனை படைத்தனர். ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளியில் மதுரை சகோதயா பள்ளிகள் சார்பில் கூடைபந்து போட்டிகள் நடந்தது.
10க்கு மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்றது. இதில் பழநி அக் ஷயா பள்ளி 17- வயது மாணவிகளின் பிரிவில் தொடர்ந்து 3 ஆண்டுகளாக முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.
14 வயது மாணவிகளின் பிரிவிலும் முதலிடமும், 19 வயது பிரிவில் 2ம் இடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலாளர் பட்டாபிராமன்,முதல்வர் மங்கையர்க்கரசி சான்றிதழ் வழங்கி பாராட்டினர்.

