ADDED : மே 27, 2026 08:21 PM
அ நிறம் | அளவு
வடமதுரை, மே 28-
பாகாநத்தம் விநாயகர், மாரியம்மன், காளியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி நேற்று முன்தினம் தீர்த்தம், முளைப்பாரி அழைப்பு, இருகால யாக வேள்வி பூஜைகள் நடந்தது.
நேற்று காலை கடம் புறப்பாடாகி கும்பங்களில் புனித நீருற்ற கும்பாபிஷேகம் நடந்தது. குண்டாம்பட்டி மீனாட்சி சுந்தரேசுவர் கோயில் தலைமை அர்ச்சகர் சுப்பிரமணி தலைமையிலான குழுவினர் கும்பாபிஷேகத்தை நடத்தினர். திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
