/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நில அளவை அலுவலர்கள் சங்க கூட்டம்
/
நில அளவை அலுவலர்கள் சங்க கூட்டம்
ADDED : ஆக 26, 2024 07:02 AM
திண்டுக்கல்:
தமிழ்நாடு நில அளவைத்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள்   கூட்டம்,பயற்சி பட்டறை திண்டுக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் முகமது முபாரக் தலைமை வகித்தார்.
மாநில தலைவர் துரைப்பாண்டி, நில அளவைத்துறை அலுவலர்கள் சங்க மாநில தலைவர் மகேந்திரகுமார், பொதுச்செயலாளர் பிரபு,  பொருளாளர் கார்த்திகேயன்,டி.என்.ஜி.ஓ.யு.,மாநில செயலாளர் கார்த்திகேய வெங்கடேசன்,டி.என்.ஜி.ஓ.யு. மாவட்ட தலைவர் பார்த்த சாரதி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பன்னீர் செல்வம் வரவேற்றார்.
மாநில நிர்வாகிகள் கணேஷ்குமார், ஜெயராமன், பூங்குன்றன், ராமலிங்கம், மாவட்ட தலைவர்கள் ராஜேஷ்குமார், முரளி, தினேஷ், குமார், மாரிசெல்வம்,சுவாமிநாதன் பங்கேற்றனர்.
502 குறுவட்ட அளவர் பணியிடங்கள் தரம் இறக்கப்பட்டுள்ளதால் குறுவட்ட அளவர் பதவி உயர்வுக்கு தகுதி பெற்றிருந்தும் பதவி உயர்வு பெறமுடியாமல் பல நில அளவர்கள் மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தரம் இறக்கப்பட்ட பணியிடங்களை தரம் உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

