sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குறைகளை கூறுவோம் ... தீர்வு காண்போம்

/

குறைகளை கூறுவோம் ... தீர்வு காண்போம்

குறைகளை கூறுவோம் ... தீர்வு காண்போம்

குறைகளை கூறுவோம் ... தீர்வு காண்போம்


ADDED : மே 17, 2024 06:11 AM

Google News

ADDED : மே 17, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோட்டில் ஓடும் கழிவுநீர்


பழநி வடக்கு ரத வீதியில் சாக்கடை கழிவுநீர் நிரம்பி வழிந்து ரோட்டில் செல்கிறது. சாக்கடை அடைப்புகளை சரிசெய்து கழிவுநீர் ஓட்டத்தை சீர்படுத்த வேண்டும்.

--பிரகாஷ், அடிவாரம், பழநி

விரைவில் சரிசெய்யப்படும்


சாக்கடைகளில் குப்பை கொட்டுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். இதனால் தான் அடைப்பு ஏற்படுகிறது. விரைவில் சரிசெய்யப்படும்.

--சுரேஷ், கவுன்சிலர், பழநி

பயணத்தில் தடை


வடமதுரை பி.கொசவபட்டி காலனி தெரு செல்லும் சிமென்ட் ரோட்டின் குறுக்கே செல்லும் வடிகால் கட்டமைப்பில் பாலம் இல்லாததால் பெரும் பள்ளமாக உள்ளது. பாலம் கட்ட வேண்டும்.

- -அழகர், வடமதுரை

விரைவில் கட்டப்படும்


ஊராட்சி நிர்வாகத்தில் தீர்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது. இதற்கான நிதி ஒதுக்கீடு வந்ததும் பாலம் கட்டும் பணி துவங்கும்.

-நாராயணன், ஊராட்சி தலைவர், பி.கொசவபட்டி.

ஆக்கிரமிப்பால் அவதி


ஒட்டன்சத்திரம் பஸ்ஸ்டாண்டில் நடமாடும் கடைகள், டூவிலர் நிறுத்தங்களால் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளது. இதனால் பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.

-குமரேசன் ,ஒட்டன்சத்திரம்.

நடவடிக்கை எடுக்கப்படும்


ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

-திருமலைசாமி, நகராட்சி தலைவர், ஒட்டன்சத்திரம்

பயன்பாடற்ற சுகாதார வளாகம்


தாண்டிக்குடி ஊராட்சி நுழைவுவாயிலில் உள்ள சுகாதார வளாகம் பயன்பாடின்றி உள்ளது. இதனால் திறந்தவெளி கழிப்பிட போக்கு அதிகரித்துள்ளது. சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.

- -பாண்டியன், தாண்டிக்குடி.

விரைவில் நடவடிக்கை


சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

- -மகேஷ், ஊராட்சி தலைவர், தாண்டிக்குடி.

வாகனங்களால் விபத்து


வேடசந்துார் வடமதுரை ரோடு, நேருஜி நகர் பூங்கா ரோடு பிரிவு ரோட்டில் அதிவேகமாக வரும் வாகனங்களால்அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. தடுக்க வேண்டும்.

---பாவேந்தன், வேடசந்துார்

நடவடிக்கை எடுக்கப்படும்


துறை அதிகாரிகளிடம் ஆலோசித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

- -மேகலா, பேரூராட்சி தலைவர், வேடசந்துார்.

வீணாகும் குடிநீர்


தருமத்துப்பட்டி அருகே கோம்பை ரோட்டில் தெருக்குழாய் திருகு இல்லாமல் பல இடங்களில் குடிநீர் வெளியேறுகிறது. குழாயை சரிசெய்து வீணாகும் குடிநீரை சேமிக்க வேண்டும்.

-ஜெ.பழனிச்சாமி, தருமத்துப்பட்டி.

விரைவில் நடவடிக்கை


குழாய் சீரமைப்பு பணி நடவடிக்கை விரைவில் துவங்கும்.

- -மருதமுத்து, ஊராட்சி தலைவர், தருமத்துப்பட்டி.

குறைந்த மின்னழுத்த பிரச்னை


கோம்பைபட்டி ஊராட்சி கே.அய்யாபட்டி 1வது வார்டு குடியிருப்பு பகுதிகளில் அடிக்கடி குறைந்த மின்னழுத்த செயல்பாடு தொடர்கிறது.

--சந்தோஷ், கே.அய்யாபட்டி.

நடவடிக்கை எடுக்கப்படும்.


குறைந்த மின்னழுத்த பிரச்னை குறித்து மின்வாரிய பொறியாளர், அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி சீரான மின்சப்ளை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- -பாண்டி, ஊராட்சி வார்டு உறுப்பினர், கோம்பைப்பட்டி






      Dinamalar
      Follow us