sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம்

/

குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம்

குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம்

குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம்


ADDED : ஏப் 21, 2024 04:40 AM

Google News

ADDED : ஏப் 21, 2024 04:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேதமான ரோட்டால் அவதி


பழநி பட்டத்து விநாயகர் கோயில் ரோடு சேதமடைந்து குண்டும் குழியுமாக உள்ளது. வாகன விபத்துக்கள் அதிகளவில் நடப்பதால் ரோட்டை சீரமைக்க வேண்டும்.

---மகேஷ், பழநி

விரைவில் நடவடிக்கை


புதிய ரோடு போட விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

- -ஜென்னதுல்ப்பதோஷ், நகராட்சி கவுன்சிலர், பழநி.

டூவீலர்களால் நெரிசல்


கோபால்பட்டி அய்யாபட்டி ரோட்டில் வணிக நிறுவனங்களுக்கு முன் டூவீலர்களை நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு விபத்து அபாயம் உள்ளது.

- -அரவிந்த்குமார், கோபால்பட்டி.

நடவடிக்கைக்கு ஏற்பாடு


டூவீலர்களை நிறுத்தி இடையூறு செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும்.

-கந்தசாமி, ஊராட்சி தலைவர், வேம்பார்பட்டி.

இரவு பயணத்தில் ஆபத்து


அய்யலுார் காக்காயன் குளத்துப்பட்டியில் பல இடங்களில் தெரு விளக்கு இல்லாததால் இரவு பயணத்தில் ஆபத்து நிலவுகிறது. இதை சீரமைக்க வேண்டும்.

- -கருப்பன், காக்காயன் குளத்துப்பட்டி.

ஆய்வுக்குப்பின் நடவடிக்கை


தேவைக்கேற்ப தெருவிளக்குகள் அமைத்து தர ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.

-தனலட்சுமி, பேரூராட்சி கவுன்சிலர், அய்யலுார்.

பாதியில் நிற்கும் பணி

ஒட்டன்சத்திரம் நகராட்சி கஸ்துாரி நகர் வடக்கு பகுதியில் தெருவிளக்கு அமைக்க மின்கம்பம் நடப்பட்டு பல மாதங்களாகியும் பணி முழுமையடையாமல் பாதியில் உள்ளது.

- --ஸ்ரீகுமார், ஒட்டன்சத்திரம்.

விரைவில் பணிகள் முடியும்


மின்கம்ப பணிகளை விரைவில் முடித்து இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

- -திருமலைசாமி, நகராட்சி தலைவர், ஒட்டன்சத்திரம்.

ரோட்டோரத்தில் குப்பை


கொடைக்கானல் வத்தலகுண்டு மெயின் ரோட்டில் உள்ள அடுக்கம் ஊராட்சியில் ரோட்டோரம் குப்பை கொட்டப்படுகிறது. தொற்று அபாயம் உள்ளது.

- -சக்திவேல், அடுக்கம்.

உடனடியாக அகற்றம்


கொடைக்கானல் வத்தலகுண்டு ரோட்டில் குப்பையை கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

-கண்ணன், ஊராட்சி தலைவர், அடுக்கம்.






      Dinamalar
      Follow us