தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம்

குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம்

குறைகளை கூறுவோம்...தீர்வு காண்போம்


ADDED : மே 06, 2024 12:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 06, 2024 12:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குடிநீர் சப்ளையில் சிக்கல்


குறவன்பாறை பகுதியில் வசிக்கும் குடியிருப்போருக்கு குடிநீர் சப்ளை நீண்ட நாள் இடைவெளியில் வருகிறது. இதனால் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- -மகேஷ், பழநி.

நடவடிக்கை எடுக்கப்படும்


ஒட்டுமொத்தமான பழநி நகரின் பிரச்னையாக இது உள்ளது. எனவே நகராட்சி கூட்டத்தில் ஆலோசித்து பிரச்னைக்கான தீர்வு காணப்படும்.

- --விமலபாண்டியன், கவுன்சிலர், பழநி

தெருவிளக்கு தேவை


தருமத்துப்பட்டி ஊராட்சி அலுவலகம் முதல் பஸ் ஸ்டாப் வரையான பகுதிகளில் போதிய தெருவிளக்கின்றி இருள் நிலவுகிறது. இதனால் விபத்து அபாயம் பெருகியுள்ளது. மின்விளக்கு வசதி ஏற்படுத்தி தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- -சரவணன், தருமத்துப்பட்டி

மின்விளக்கு பொருத்தப்படும்


ஆய்வுக்கு பின் தேவையான இடங்களில் மின்விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

- -மருதமுத்து, ஊராட்சி தலைவர், தருமத்துப்பட்டி

சேதமடைந்த ரோடு


வேடசந்துார் நேருஜி நகர் பூங்கா ரோட்டில், புதிதாக கட்டப்பட்ட பாலத்தின் அடுத்துள்ள பகுதியில் உள்ள ரோடானது மேடு, பள்ளமாக உள்ளது.இதை சீரமைத்து புதிய தார் ரோடு அமைத்து தர வேண்டும்.

-சந்திரசேகர், வேடசந்துார்

விரைவில் சீர்படுத்தப்படும்


புதிய ரோடு பணிக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. விரைவில் சீரமைக்கப்படும்.

-மேகலா, பேரூராட்சி தலைவர், வேடசந்துார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us