தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மண் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் ஓட்டம்

மண் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் ஓட்டம்

மண் கடத்திய லாரி பறிமுதல்; டிரைவர் ஓட்டம்


ADDED : மே 20, 2026 09:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 20, 2026 09:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல், மே 21-

வடமதுரை அருகே சட்டவிரோதமாக கிராவல் மண் கடத்திய லாரியை  கனிம வளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

வேடசந்துார், வடமதுரை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குளம், ஆற்றுப்படுகைகளில் உரிய அனுமதி இன்றி  சட்டவிரோத மண் கடத்தல் நடக்கிறது.இதைத்தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தும் பலனில்லை. அரசியல் பின்புலம், பண பலத்தின் உதவியுடன் மணல் மாபியாக்கள்  தொடர்ந்து கடத்தல் தொழிலில் ஈடுபடுகின்றனர். வடமதுரை எல்லைக்குட்பட்ட நாகம்பட்டி குளத்தில் மண் கடத்தல்  நடப்பதாக கனிம வளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகனுக்கு புகார் வந்தது. நேற்று முன்தினம் இரவு தாமரைப்பாடி, நாகம்பட்டி அருகே கனிம வளத்துறை அதிகாரிகள் ரோந்து  சென்றனர். அவ்வழியே வந்த TN 12 AQ 8119 பதிவெண் லாரியை மடக்கி தணிக்கை செய்ததில் அரசு  அனுமதி, நடைச்சீட்டு இல்லாமல் 3 யூனிட் கிராவல் கடத்திவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. லாரியை பறிமுதல் செய்து வடமதுரை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றதில் டிரைவர் தப்பினார்.  கனிமவளத்துறை உதவி இயக்குனர் கிருஷ்ணமோகன் புகாரில் போலீஸ் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us