ADDED : மார் 22, 2024 05:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: காதல் திருமணம் செய்த இரு காதல் ஜோடிகள் பாதுகாப்பு கோரி வடமதுரை போலீசில் தஞ்சமடைந்தனர்.
வடமதுரை கோப்பம்பட்டி பகுதியை சேர்ந்த காய்கறி வியாபாரி ஆனந்தகுமார் 27. வேடசந்துார் பூத்தாம்பட்டி பகுதியை சேர்ந்த அனிதா 21, வை காதலித்தார். வெவ்வேறு சமூகம் என்பதால் பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு ஏற்பட கோயில் ஒன்றில் திருமணம் செய்தனர். இதே போல் குஜிலியம்பாறை வீரகவுண்டன்பட்டி பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளி குமரேசன் 26, செவிலியராக பணிபுரிந்த மணப்பாறை காட்டுப்பட்டியை சேர்ந்த மோகனப்பிரியா 22, யை காதலித்தார். எதிர்ப்பு ஏற்பட இருவரும் கோயில் ஒன்றில் திருமணம் முடித்தனர்.
இவ்விரு காதல் ஜோடிகளும் பாதுகாப்பு கோரி வடமதுரை மகளிர் போலீசில் தஞ்சமடைந்தனர்.

