தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குறைந்தது முருங்கை விலை

குறைந்தது முருங்கை விலை

குறைந்தது முருங்கை விலை


ADDED : ஜூன் 26, 2026 09:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 26, 2026 09:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஒட்டன்சத்திரம், ஜூன் 27-

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் கிலோ ரூ.85க்கு விற்ற முருங்கைக்காய் 10 நாட்களில் பாதியாக சரிவடைந்து ரூ.42க்கு விற்பனை ஆனது.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், கப்பலப்பட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, சாலைப்புதுார் சுற்றியுள்ள பகுதிகளில் முருங்கை அதிகளவில் விளைவிக்கப்படுகிறது.

கடந்த 10 நாட்களுக்கு முன் அவ்வப்போது மழை பெய்தால் முருங்கைச்செடிகளில் இருந்த பூக்கள் உதிர்ந்து மகசூல் பாதிக்கப்பட்டது. இதனால் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்து முருங்கை கிலோ ரூ.85க்கு விற்றது.

தற்போது பல இடங்களில் முருங்கை அறுவடை தொடர்வதால் மார்க்கெட்டிற்கு வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக விலை சரிவடைந்து கிலோ ரூ.42க்கு விற்கப்படுகிறது. முருங்கை விலை தொடர்ந்து குறைந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கமிஷன் கடை உரிமையாளர் ஒருவர் கூறுகையில், ‘இனி வரும் நாட்களில் வரத்து அதிகரித்தால் முருங்கை விலை இன்னும் குறைய வாய்ப்பு உள்ளது’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us